Skip to main content

"'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல. அது...'' - நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி 

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

bdg

 

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த 2017- ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான பாகுபலி-  2 படம் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, நடிகர் பிரபாஸ் இதுகுறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

''பாகுபலி- 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், 'பாகுபலி- 2' மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்