Advertisment

''ஒன்று எனக்கு ஆகவேண்டும், இல்லை அனுஷ்காவிற்கு..! அதுவரை இது தொடரும்..'' - பிரபாஸ் புலம்பல்

பாகுபலி பட புகழ் பிரபாஸ் - அனுஷ்கா ஆகியோர் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் ரொம்ப வருடங்களாக பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து நடிகர் பிரபாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் விளக்கமளித்து பேசியபோது....

Advertisment

baahubali

''நானும் அனுஷ்காவும் சேர்ந்து நடித்த காலத்திலுருந்து இப்போது வரை பதினோரு ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக மட்டுமே இருந்து வருகிறோம். இனிமேலும் இருப்போம். மற்றவர்கள் நினைப்பதுபோல் இது காதல் இல்லை. எங்களுக்குள் காதல் இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் எங்கள் இருவருக்கும் இல்லை. நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்று பரவும் வதந்திகளை எப்படி நிறுத்தவது என்று தெரியவில்லை. எங்கள் இருவரில் ஒருவருக்கு திருமணம் நடந்தால்தான் இந்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புகிறேன்'' என்றார்.

Advertisment
anushka shetty prabhas
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe