/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/34_65.jpg)
இந்திய அளவில் கவனிக்கப்படும் ஹீரோவாக வலம் வரும் பிரபாஸ், தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’, பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் படம் வருகிற ஜூன் 16 ஆம் தேதியும்சலார் படம் செப்டம்பர் 28 ஆம் தேதியும் வெளியாகவுள்ளன.
இதனிடையே, நாக் அஸ்வின் இயக்கும் 'ப்ராஜெக்ட் கே' படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இப்படத்தை பெரும் பொருட்செலவில் அஸ்வின் தத் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், 'ப்ராஜெக்ட் கே' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பொங்கலைமுன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி (12.01.2024) வெளியாகவுள்ளது. இதனை அறிவித்து அதற்கான போஸ்டரையும் படக்குழுசமுக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. இது தற்போது ரசிகர்களின்கவனத்தை ஈர்த்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)