Advertisment

"காவிக்கொடி...ஜெய் ஸ்ரீ ராம்..." - விமர்சனத்துக்குள்ளான பிரபாஸ் பட டீசர்

prabhas Adipurush teaser trolled in social media

Advertisment

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அயோத்தியில் நேற்று நடைபெற்ற இப்படத்தின் டீசர் விழாவில் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டார்கள். இந்த டீசரில், ஒரு காட்சியில் பிரபாஸ் நடந்து வருகையில் காவி கொடி பறப்பது போலவும், பின்பு ஜெய் ஸ்ரீ ராம் என்று பின்னணி பாடல் ஒலிப்பது போன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக படத்தின் கிராஃபிக்ஸ் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் டீசரை பார்த்த பிறகு படத்தின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விமர்சனம்செய்து வருகின்றனர்.

இதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் ராமர் வேடத்தில் இருக்கும் ராம்சரண் புகைப்படத்தை பிரபாஸ் புகைப்படத்துடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

fans tollywood prabhas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe