Advertisment

prabhas adipurush movie shoot wraped

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகிவரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து பிரம்மாண்ட படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன்சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குநர்ஓம் ராவத் இயக்குகிறார்.

Advertisment

3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. 'ஆதிபுருஷ்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'ராதே ஷியாம்' திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.