/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krithi-im.jpg)
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும்படம்'ஆதி புருஷ்'.இப்படத்தில், ராமராக பிரபாஸும், ராவணனாக சயிஃப் அலிகானும் நடிக்கவுள்ளனர்.படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆதி புருஷ்படத்தில்கதாநாயகியாக, சீதைவேடத்தில்நடிப்பதற்கு, முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்தநிலையில், சீதை வேடத்தில்நடிக்க, பிரபல இந்தி நடிகைக்ருத்திசனோன்ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்எனவும்தகவல் வெளியாகிவுள்ளது. இவர் தெலுங்கில், மகேஷ் பாபுவுடன் 1: நெனோகடைன் என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'ஆதிபுருஷ்' படக்குழுவினர்தங்களுடைய வெளியீட்டுத் தேதியைஏற்கனவேஅறிவித்துவிட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.இப்படம், 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11ஆம் தேதிதமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)