பழசுவிட புதுசு நல்லா இருக்கு... விஜய் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட பிரபாஸ்...

பாகுபலி 1 மற்றும் 2ஆம் பாகத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் பிரபாஸ். இதனையடுத்து பிரபாஸ் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடிக்கிறார்.

prabhas

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தெலுங்கு படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ஹிந்தி ரீமேக் ‘கபிர் சிங்’டீஸர் சமீபத்தில் வெளியானது. தெலுங்கு பட டீஸர் ஏற்படுத்திய அதே பாதிப்பை இதுவும் ஏற்படுத்தியுள்ளதால் ஷாகித் கபூர் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்கிறார்.

இந்நிலையில் கபிர் சிங் படத்தின் டீஸரை பார்த்த பிரபாஸ் அதை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதை பார்த்த மேக்கப் மேன் ஆலிம் ஹக்கிம் உடனடியாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கு கால் செய்து கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசிய பிரபாஸ், “தெலுங்கு அர்ஜுன் ரெட்டி விட கபிர் சிங் மேலும் சிறப்பாக உள்ளது” என்று பாராட்டியுள்ளார். பிரபாஸுக்கு மேக்கப் மேனாக இருப்பவர்தான் ஷாகித் கபூருக்கும் மேக்கம் மேனாக இருக்கிறார்.

இது செய்திகளாக பல ஊடகங்களில் வெளியே வர விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் பிரபாஸ் சொல்லியவது தவறு என்று சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

kabir singh prabhas saaho shahid kapoor
இதையும் படியுங்கள்
Subscribe