Skip to main content

பழசுவிட புதுசு நல்லா இருக்கு... விஜய் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட பிரபாஸ்...

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

பாகுபலி 1 மற்றும் 2ஆம் பாகத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் பிரபாஸ். இதனையடுத்து பிரபாஸ் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடிக்கிறார்.
 

prabhas

 

 

தெலுங்கு படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ஹிந்தி ரீமேக் ‘கபிர் சிங்’டீஸர் சமீபத்தில் வெளியானது. தெலுங்கு பட டீஸர் ஏற்படுத்திய அதே பாதிப்பை இதுவும் ஏற்படுத்தியுள்ளதால் ஷாகித் கபூர் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்கிறார். 
 

இந்நிலையில் கபிர் சிங் படத்தின் டீஸரை பார்த்த பிரபாஸ் அதை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதை பார்த்த மேக்கப் மேன் ஆலிம் ஹக்கிம் உடனடியாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கு கால் செய்து கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசிய பிரபாஸ்,  “தெலுங்கு அர்ஜுன் ரெட்டி விட கபிர் சிங் மேலும் சிறப்பாக உள்ளது” என்று பாராட்டியுள்ளார். பிரபாஸுக்கு மேக்கப் மேனாக இருப்பவர்தான் ஷாகித் கபூருக்கும் மேக்கம் மேனாக இருக்கிறார்.
 

இது செய்திகளாக பல ஊடகங்களில் வெளியே வர விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் பிரபாஸ் சொல்லியவது தவறு என்று சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உதட்டை கிழித்த கிரிக்கெட் பால்... 13 தையல் போட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகர்...

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களில் ஒன்று ஜெர்ஸி. இப்படத்தில் ஹீரோவாக நானியும், ஹீரோயினாக ஷரத்தா ஸ்ரீநாத்தும் நடித்தனர். கிரிக்கெட்தான் வாழ்க்கை என்று நினைத்துகொண்டு வாழும் இளைஞன் ஒருவரின் வாழ்க்கை திருமணம் நடைபெற்றவுடன் அந்த கிரிக்கெட்டையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். மீண்டும் தன்னுடைய மகனின் ஆசைக்காக கிரிக்கெட்டில் கலந்துகொள்கிறார். அவர் சாதித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை. 
 

shahid kapoor

 

 

இந்த வெற்றி படத்தை பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பாலிவுட்டில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக்காவது உறுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

தற்போது பாலிவுட்டில் படபிடிப்பும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஷாகித் கபூர் உடற்பயிற்சி மேற்கொண்டு, கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொண்டார். இந்த படத்தின் ஷூட்டிங் மோகாலியில் நடைபெற்றபோது கிரிக்கெட் பந்து ஷாகித்தின் உதட்டை கிழித்து, 13 தையல் உதட்டில் போட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த வருடம் ஷாகித் நடிப்பில் கபீர் சிங் படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இந்த படம் 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். 

 

 

Next Story

''வெள்ளிக்கிழமை தமிழ் மக்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு'' - பாகுபலி பிரபாஸ்  

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள 'சாஹோ' படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் நடிகர் பிரபாஸ் கலந்துகொண்டு பேசும்போது... 

 

prabhas

 

 

''பாகுபலிக்கு பிறகு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் 'சாஹோ' இயக்குனர் சுஜீத் என்னை விடவில்லை. அதுபோக இந்த படமும் என் இரண்டரை வருடங்களை எடுத்துக்கொண்டது. ஏனென்றால் இந்த படத்தின் காட்சிப்படுத்தல் அப்படி. அதற்கு இரண்டரை வருடங்கள் தேவைபட்டது. இல்லையென்றால் படம் இந்த அளவுக்கு மிக பிரமாண்டமாக வெளிவந்திருக்காது. இந்த படம் உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அது நம் கண்களுக்கு கண்டிப்பாக விருந்து படைக்கும். எனக்கு நேரடி தமிழ் படங்கள் பண்ண ஆசை. அது கூடிய விரைவில் நடக்கும் என நம்புகிறேன். தமிழ் ரசிகர்களுக்காக வரும் வெள்ளியன்று ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறத" என்றார்.