Advertisment

தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடிக்கும் பிரபாஸ்! 

prabhas

இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற படம் தன்ஹாஜி. அஜய் தேவ்கன் மற்றும் சைஃப் அலிகான் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை அஜய் தேவ்கன் பூஷண் குமார் உள்ளிட்டோர் தயாரித்தனர். ஓம் ராவத் என்பவர் இப்படத்தை இயக்கினார்.

Advertisment

தற்போது ஓம் ராவத் இயக்கவுள்ள அடுத்த படத்தையும் டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷண் குமாரே தயாரிக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

Advertisment

'ஆதிபுருஷ்' என்ற பெயரில் உருவாகும் இந்த படம் 3டியில் உருவாகிறது. இந்தியில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. இது ராமாயணம் கதையின் ஒரு பகுதிதான் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராதே ஷ்யாம் என்னும் படத்தில் கவனம் செலுத்தி வரும் பிரபாஸ், அடுத்து நாக் அஷ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

prabhas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe