பாகுபலி இந்தியளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து பிரபாஸின் மார்க்கெட் இந்தியா முழுவதும் வேறு ஒரு தளத்திற்கு சென்றது. அதை பயன்படுத்தி யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாஹோ படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, கடந்த வருடம் வெளியானது. ஆனால், அந்த படம் எடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்கு ஏற்ற வசூலை ஈட்டவில்லை.

prabhas

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதனை தொடர்ந்து பிரபாஸின் 20வது படத்தையும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. பிரபாஸ் 20 என்று அழைக்கப்படும் இந்த படத்தை கே கே ராதா கிருஷ்ணா இயக்குகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்க இருக்கும் பிரபாஸின் 21வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாத் துறையில் மிகப் பிரபலமான மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ், தெலுங்கு சினிமாத் துறையில் அந்த நிறுவனத்தின் 50ஆவது ஆண்டாகும். இதை முன்னிட்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தை தாங்கள் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மிகப்பெரிய பட்ஜெட்டில் நாக் அஷ்வினை வைத்து படம் இயக்கப்போகிறோம் என்று படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'எவடே சுப்ரமணியம்', 'மஹாநடி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நாக் அஷ்வின். இவரது மனைவி ப்ரியங்கா தத் தான் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனர் அஸ்வினி தத்தின் மகள். இவர்கள் தான் 'மஹாநடி' படத்தையும் தயாரித்திருந்தனர்.