radhe shyam

‘சாஹோ' படத்தை தொடர்ந்து பிரபாஸ், ராதா கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரபாஸின் 20ஆவது படமான இந்தப் படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

Advertisment

இதில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. தற்போது ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஷூட்டிங்கிற்கு 'பிரபாஸ் 20' படக்குழு ஆயத்தமாகியிருந்தது.

Advertisment

இனி வெளிநாட்டுபடப்பிடிப்பு அனுமதிக்கு நாட்களாகும் என்பதால், இங்கே அரங்குகளை உருவாக்கி வந்தது படக்குழு. பிரம்மாண்டமான மருத்துவனை, ஐரோப்பாவின் வீதிகள், பெரிய கப்பல் உள்ளிட்ட அரங்குகள் அமைத்தது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் 2ஆம் வாரம் தொடங்க இருப்பதாக இயக்குனர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், "செப்டம்பர் இரண்டாம்வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவரையும் வைத்து மிகவும் நீண்ட இனிமையான படப்பிடிப்பு நடைபெறவுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த கரோனா லாக்டவுனில் தன்னுடைய அடுத்த இரண்டு படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிரபாஸ் வெளியிட்டுள்ளார்.