Advertisment

ஷூட்டிங்கிற்கு ரெடியாகும் பிரபாஸ்!

'சாஹோ' படத்தைத் தொடர்ந்து பிரபாஸ், ராதா கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரபாஸின் 20ஆவது படமான இந்தப் படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

Advertisment

இதில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.

Advertisment

தற்போது ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் படபிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பிரபாஸ் 20 படக்குழு ஆயத்தமாகியுள்ளது.

இனிமேல் வெளிநாட்டுப் படப்பிடிப்பு அனுமதிக்கு நாட்களாகும் என்பதால், இங்கே அரங்குகளை உருவாக்கி வருகிறது படக்குழு.பிரம்மாண்டமான மருத்துவனை, ஐரோப்பாவின் வீதிகள், பெரிய கப்பல் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தை முடித்த பின்னர் இயக்குனர் நாக் அஷ்வினின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திரையுலகில் வைஜெயந்தி மூவிஸ் அடியெடுத்து 50 ஆண்டுகள் ஆகியுள்ளதைக் கொண்டாடும் வகையில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

prabhas
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe