'சாஹோ' படத்தைத் தொடர்ந்து பிரபாஸ், ராதா கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரபாஸின் 20 ஆவது படமான இந்தப் படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
இதில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. தற்போது ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 'பிரபாஸ் 20' படக்குழு ஆயத்தமாகியுள்ளது.
இனி வெளிநாட்டுப் படப்பிடிப்பு அனுமதிக்கு நாட்களாகும் என்பதால், இங்கே அரங்குகளை உருவாக்கி வருகிறது படக்குழு. பிரம்மாண்டமான மருத்துவனை, ஐரோப்பாவின் வீதிகள், பெரிய கப்பல் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
Presenting you the title and first look of #Prabhas20#RadheShyam#Prabhas20FirstLook
Starring #Prabhas & @hegdepooja
Director @director_radhaa
Producers @UV_Creations@TSeries@itsBhushanKumar#Vamshi#Pramod@PraseedhaU@AAFilmsIndiapic.twitter.com/M7xbvNnx9p
— UV Creations (@UV_Creations) July 10, 2020
இந்நிலையில், பிரபாஸ் 2.0படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ராதே ஷ்யாம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.