Advertisment

"புரட்சியாளர்களை அவமதிக்கிறார்" - டாப் ஹீரோ பட போஸ்டரை விமர்சித்த நடிகை பூனம் கவுர்

pponam kaur about pawan kalyan ustaad bhagat singh poster

Advertisment

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பவன் கல்யாண் நடித்து வரும் படம் 'உஸ்தாத் பகத் சிங்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளம்பஸ் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் போலீஸ் கதாபாத்திரத்தில்பவன் கல்யாண் நடிக்கிறார். இந்த வெளியீட்டை முன்னிட்டு பல போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வந்தது. அதில் ஒரு போஸ்டரில் பவன் கல்யாண் காலடிக்கு கீழ் படத்தின் தலைப்பு இடம் பெற்றது.

இந்த போஸ்டர் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கை அவமதிப்பதாக நடிகை பூனம் கவுர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "புரட்சியாளர்களை உங்களால் மதிக்க முடியாத போது அவர்களை அவமதிக்காதீர்கள்.சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் போஸ்டர்பகத்சிங் பெயரை காலுக்கு கீழே வைத்து அவமானப்படுத்துகிறது. இதை எப்படி சொல்வது ஈகோவா அல்லது அறியாமையா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ACTOR PAWAN KALYAN Actress
இதையும் படியுங்கள்
Subscribe