Advertisment

பிரபல அரசியல் தலைவரிடம் பவர் ஸ்டார் வைத்த கோரிக்கை... கூட்டத்தில் எழுந்த சிரிப்பலை!

Power Star Srinivasan

Advertisment

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்த பவர் ஸ்டார் சீனிவாசன், தற்போது 'செக்சஷன் 370' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று (17.09.2021) நடைபெற்றது. பவர் ஸ்டார் சீனிவாசன், ஏ.சி. சண்முகம் உட்பட படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், "பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளில் எனக்குப் பேச வாய்ப்பளித்த என்னுடைய சகோதரர் பாபு கணேஷிற்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இன்று திரையுலகில் பேரெடுத்து நிற்கிறேன் என்றால் அதற்கு முழுக் காரணமும் பாபு கணேஷ்தான். இது என்னுடைய 105வது படமாகும். இந்தப் படத்தில் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு நடித்துள்ளோம். அதற்கேற்றபடி படமும் சிறப்பாக வந்துள்ளது. அடுத்த எம்.எல்.ஏ. தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்தும்படி ஏ.சி.எஸ். அண்ணனுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். நான் கண்டிப்பாக எம்.எல்.ஏ.வாக வெற்றிபெறுவேன். இந்த முறை என்னைக் கூப்பிடாமல் விட்டுவிட்டார். நிச்சயம் அடுத்த முறை அவர் கட்சியை வலுப்படுத்த என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்" எனக் கூறினார்.

புதிய நீதிக்கட்சியின் தலைவரான ஏ.சி. சண்முகத்திடம் பவர் ஸ்டார் சீனிவாசன் எம்.எல்.ஏ சீட் கேட்டதும் அங்கே வந்திருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

Power Star Srinivasan
இதையும் படியுங்கள்
Subscribe