/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/324_10.jpg)
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘ஒன்பதுல குரு ’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிககள் மத்தியில் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இந்தாண்டு இவர் நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை.
திரைப்படங்களைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். 2019 மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார். 2020-ல் ஒரு நிகழ்ச்சியில், “சீக்கிரமாக கட்சி தொடங்குங்கள் ரஜினி. இல்லையென்றால், நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வந்து சேர்ந்து விடுங்கள் என்று அவர் பேசியது அப்போது பரபரப்பை கிளப்பியது. அரசியல், திரைத்துறை தாண்டு தொழிலதிபராகவும் வலம் வருகிறார்.
இந்த நிலையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)