‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘ஒன்பதுல குரு ’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இப்போது ‘பெர்ஃப்யூம்’ என்ற தலைப்பில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன், டெல்லி பொருளாதாக குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.1000 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.5 கோடி கமிஷனாக பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு ரூ.1000 கோடி கடன் பெற்றுத் தரவில்லை. இதனால் அந்த தொழிலதிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பவர் ஸ்டார் சீனிவாசன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
2018ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் முரையாக ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் மீது ஏற்கனவே சென்னையில் 6 மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.