Advertisment

திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் சீனிவாசன்... மருத்துவமனையில் சிகிச்சை!

Powerstar Srinivasan

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள பவர் ஸ்டார் சீனிவாசன், ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் நாயகனாக பவர் ஸ்டார் சீனிவாசனே நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இன்று (29.07.2021) காலை திடீரென பவர் ஸ்டார் சீனிவாசன் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துவருகின்றனர். திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக பவர் ஸ்டார் சீனிவாசன் மயங்கி விழுந்ததாக படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.

Advertisment

Power Star Srinivasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe