pawan kalyan

Advertisment

மலையாளத்தில் இந்தாண்டு ஃபிப்ரவரி மாதம் வெளியான படம் 'அய்யப்பனும் கோஷியும்'. போலீஸ் அதிகாரியான அய்யப்பனுக்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கோஷிக்கும் இடையே யார் பெரியவன் என நடக்கும் மோதலே இப்படத்தின் கரு. அய்யப்பனாக பிஜு மேனனும் கோஷியாக பிருத்வி ராஜும் நடிப்பில் மிரட்டியிருந்தனர். சமீபத்தில் மறைந்த திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான சச்சியின் இயக்கத்தில் வெளியான இப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெற தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டனர். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் கதிரேசன் பெற்றுள்ளார். தமிழில் பார்த்திபனும் கார்த்தியும் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அது உறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில் தெலுங்கு ரீமேக் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கில், தெலுங்குதிரையுலகின் முன்னணி நடிகர் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் மலையாளத்தில் பிஜு மேனன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க, சித்தாரா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சாகர் கே.சந்திரா இயக்கவுள்ளார். தமன் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தற்போது 'பிங்க்' தெலுங்கு ரீமேக்கில் நடித்துவரும் பவன் கல்யாண், தொடர்ச்சியாக பல படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.