நயன்டீஸ் கிட்ஸ்களின் விருப்பமான தொடரின் பிரபலம் காலமானார்

Power Rangers actor Jason David Frank passed away

90களில் குழந்தைகளின் விருப்பமான தொடர்களில் ஒன்றாக விளங்கியது பவர் ரேஞ்சர்ஸ். இந்த தொடரில் 1993ஆம் ஆண்டு முதல் 1996 வரை க்ரீன் ரேஞ்சராக நடித்தவர் ஜேசன் டேவிட் ஃபிராங்க். இத்தொடரில் கிட்டத்தட்ட 124 எபிசோடுகளில் நடித்து பிரபலமான இவர் டேக்வாண்டோ, கராத்தே போன்ற தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவர். இத்தொடர் மட்டுமல்லாது பல தொலைக்காட்சி தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜேசன் டேவிட் ஃபிராங்க் தனது 49வயதில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜேசன் டேவிட் ஃபிராங்கிற்கு, இரண்டு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நேரத்தில் அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பிரைவசிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

actor passed away
இதையும் படியுங்கள்
Subscribe