வெங்கட் பிரபு வெளியிட்ட போஸ்டர் ; இணையத்தில் வைரல்

Poster released by Venkat Prabhu; Viral on the Internet

'நந்தா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 'நான் மகான் அல்ல' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வினோத். 2020-ஆம் ஆண்டு வெளியான 'அந்தகாரம்' படத்தில் பார்வை குறைபாடு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதன் பிறகு கிரிமர்பி என்பவர் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சூப்பர் டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்தில் வினோத்திற்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு 'கொஞ்சம் பேசினால் என்ன' என்று தலைப்பு வைக்கப்பட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe