Advertisment

சென்னையில் மூடப்படும் பிரபல திரையரங்கம்

Popular udhayam cinemas theater to close in Chennai

சென்னையில் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற திரையரங்கமாக இருந்து வருகிறது உதயம் திரையரங்கம். அசோக் நகரில் உள்ள இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு ஸ்கிரீன்கள் அமைந்திருந்தன. நீண்ட காலமாகியும் தியேட்டரின் உள்கட்டமைப்பு வசதிகளை அந்த நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்ததால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும்அங்கு குறைந்தே காணப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், உதயம் திரையரங்கம் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது திரையரங்க ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதேபோல் சமீபத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது உதயம் திரையரங்க கட்டடமும் இடிக்கப்படவுள்ளதாகத்தெரிகிறது.

Chennai theater
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe