/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DQGcGIkVAAEQvtS.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உழைப்பாளர் தினத்தன்று பிறந்த நாள் கொண்டாடிய அஜித்துக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது இயக்குனர் சுசீந்திரனும் அஜித்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அதில்..."நான் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது எனது நண்பன் உதவி இயக்குனர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது ஆபரேசனுக்கு மூன்று லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம். அப்பொழுதுதான் முதன் முதலில் ஜனா படத்தின் படப்பிடிப்பில் அஜித் சாரை சந்தித்தேன். ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். அப்பொழுதே முகம் தெரியாத சகதொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201805022258053256_1_susee-1._L_styvpf.jpg)
இதை பார்த்த பலரும் சுசீந்திரனை பாராட்டியுள்ள நிலையில் சுசீந்திரனின் பதிவில் உண்மை இல்லை என்று சக இயக்குனரான இலக்கியன் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...."இந்த செய்தி முற்றிலும் பொய். இதை ரோஜா ரமணின் ஆன்மாவே மன்னிக்காது. அஜித்திடம் பேசியது நான். அஜித் சார் அந்த சமயத்தில் பெரியதாக பண உதவி செய்யவில்லை. அஜித் சாரிடம் கால்ஷீட் வாங்கவே அஜித் சாரை பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார். பி.கு : இது நடந்த சமயம் ஜனா பட சூட்டிங் கிடையாது. வில்லன் பட சூட்டிங்” என பதிவிட்டுள்ளார். இப்படி இலக்கியனும், சுசீந்திரனும் சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்டது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)