Advertisment

“இப்படித்தான் நான் விழுந்தேன்!” - விபத்து காட்சியை வெளியிட்ட வைரல் நடிகை...!

popular actress fell down while in shooting

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அந்தப் படத்தில் இடம்பெறும் கண் சிமிட்டும் காட்சி மூலம் பல ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் பிரியா பிராகாஷ் வாரியர். அந்த கண் சிமிட்டும் வீடியோ வெளியான பிறகு பலரும் அதைப் போன்றே முயற்சி செய்து டிக்டாக் பொன்ற வீடியோ வெளியிடும் செயலில் ஈடுபட்டனர்.

Advertisment

பின்னர் அவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் நடித்து வரும் தெலுங்கு படமான ‘செக்’ படத்தில், அவர் நடிகர் நிதின் முதுகின் மீது ஏற வேண்டிய காட்சியில், நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அவருடன் படப்பிடிப்பில் ஈடுபட்டவர்கள் அவரை தூக்கினர். இந்நிலையில் இந்த விபத்து வீடியோவை நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நிதின், ரகுல்பிரீத் சிங், பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த 'செக்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Actor nithin priya variyar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe