poonam tweet about actor director actress get viral

எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சிருக்கும் வரை' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் கவுர். இதனைத் தொடர்ந்து கமலின் 'உன்னை போல் ஒருவன்' படத்தில் 'அனு' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான 'பயணம்', விஷாலின் 'வெடி' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் நடக்கும் விஷயங்கள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். கடந்த மாதம் கூட இயக்குநர் திரி விக்ரம் குறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தெலுங்கு நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்காதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் பெயர் குறிப்பிடாமல் ஒரு பஞ்சாபி நடிகையை ஒரு இயக்குநர்தான் துன்புறுத்தினார் என தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “தெளிவுபடுத்துகிறேன். நடிகையை கர்ப்பமாக்கி கருவை கலைக்க செய்து அவரது சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் அல்ல. அந்த நடிகையை துன்புறுத்தியது இயக்குநர்தான். இந்த விவகாரத்தில் தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு அந்த நடிகைக்கு பாதி உதவியை செய்தது. ஆனால் நானும் நடிகர் மற்றும் அரசியல்வாதியான அவரும் அரசியல் காரணங்களால் தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டோம்” என பதிவிட்டுள்ளார். அவர் எந்த ஒரு பிரபலத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவரின் பதிவு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment