Skip to main content

“கட்டிலின் முனையில் என் தலையை மோதினார்” -கணவர் குறித்து  பூனம் பாண்டே!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020
poonam pandey

 

 

பல வருடங்களாக எதையாவது சொல்லி அல்லது வீடியோ, புகைப்படங்கள் வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியே பிரபலமானவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

இப்படி சுய விளம்பரத்திற்காக எதையாவது பரபரப்பாக செய்து ட்ரெண்ட் ஆகும் பூனம் பாண்டே, ஊரடங்கு காலத்திலும் தனது காதலருடன் காரில் பயணம் மேற்கொண்டு சிக்கினார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

 

பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி பூனம் பாண்டே - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பூனம் பாண்டே, ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் திருமணமாகி பத்து நாட்களில் காதல் கணவர் மீது பாலியல் புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகை பூனம் பாண்டே கூறிய புகாரில், தனது கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கொடுமை படுத்துவதாகவும், இதை எதிர்த்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். எனவே அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் இருவருக்குள்ளும் என்ன நடைபெற்ற என்று பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். அதில், “எனக்கும் சாமுக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது, அது முற்றிய நிலையில் அவர் என்னை தாக்க தொடங்கினார். அவர் என்னை கழுத்தை நெறித்தார், நான் இறக்க போகிறேன் என்றே நினைத்தேன். அவர் என் முகத்தில் குத்தி, என் தலைமுடியை பிடித்து இழுத்து கட்டிலின் முனையில் என் தலையை மோதினார். எப்படியோ அவரது பிடியிலிருந்து விலகி அந்த அறையை வெளியே ஓடி வந்தேன். ஓட்டல் ஊழியர்கள் போலீஸுக்கு போன் செய்ததால் அவர்கள் வந்து சாமை கைது செய்தனர். என்னிடமிருந்தும் புகார் பெற்றுக் கொண்டனர்.

 

நாங்கள் காதலிக்கும் காலத்திலேயே அவரால் நான் பலமுறை மருத்துவமனைகளில் இருந்துள்ளேன். இந்த மோசமான உறவை நான் பொறுத்துக் கொண்டதற்கான காரணம் நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்று நான் நம்பியதுதான். எங்களை எப்போதும் ஒரு சிறந்த ஜோடியாக நான் உருவகித்துக் கொண்டேன். அவரது அதீத காதலாலாலும், பாதுகாப்பின்மையாலும் கோபம் வெளிப்படும். இவை அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக, இது நல்ல முடிவாக இருக்கவில்லை. காதலுக்கு கண்ணில்லை என்பதற்கு நானே சிறந்த உதாரணம்” என்று கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பூனம் பாண்டே மீது வழக்குப் பதிவு

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
case against poonam pandey

பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் பூனம் பாண்டே. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் எனக் கூறி சர்ச்சைக்கு ஆளானார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்த சூழலில் கடந்த 2 ஆம் தேதி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. 

மேலும் அவரது குடும்பத்தாரைப் பலரும் தொடர்பு கொண்டபோது, யாராலும் நெருங்க முடியவில்லை எனவும் செய்திகள் வெளியானது. மேலும் எங்கு இறந்தார்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது எனப் பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. அதோடு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்கின்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு அடுத்த நாளே பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

இதையடுத்து கடந்த 3 ஆம் தேதி பூனம் பாண்டே, தான் உயிரோடு இருப்பதாக தெரிவித்து அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். மேலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இவரது இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது. மேலும் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பூனம் பாண்டே மீது ஃபைசான் அன்சாரி என்பவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் ஆகியோர் சொந்த விளம்பரத்துக்கு இதுபோன்று செய்து கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு விளையாடியுள்ளதாக குற்றம்சாட்டி ரூ.100 கோடி கேட்டுள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த கான்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“நான் உயிரோடு தான் இருக்கிறேன்” - வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
poonam pandey alive

பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் பூனம் பாண்டே. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் எனக் கூறி சர்ச்சைக்கு ஆளானார். தொடர்ந்து அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார். 

இந்த சூழலில் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பதிவிடப்பட்டிருந்தது. இது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரைப் பலரும் தொடர்பு கொண்ட போது, யாராலும் நெருங்க முடியவில்லை எனவும் செய்திகள் வெளியானது. மேலும் எங்கு இறந்தார்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது என பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது, பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. 

அதோடு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்கின்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு அடுத்த நாளே பூனம் பாண்டே கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. இதனிடையே பூனம் பாண்டேவின் முன்னாள் கணவர், சாம், “பூனம் பாண்டே இறப்பு நிச்சயமாக உண்மையாக இருக்க முடியாது. விரைவில் இது குறித்து பதிலளிக்கிறேன்” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், பூனம் பாண்டே உயிரோடு இருப்பதாக அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் உயிரோடு தான் இருக்கிறேன். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் நான் பாதிக்கப்படவில்லை. இந்த நோயை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், அதைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமல், ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலைவரை சென்றுள்ளனர். மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன. விமர்சன விழிப்புணர்வுடன் ஒருவரையொருவர் மேம்படுத்தி, ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம்” என்றுள்ளார்.