Advertisment

“கைதாகவில்லை, வீட்டில் படம்தான் பார்த்தேன்”- பூனம் பாண்டே

poonam

இந்தியாவின் பிரபல நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே, அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு அதன் மூலம் கவனத்தை ஈர்ப்பவர்.

Advertisment

கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்றால், தான் நிர்வாணமாக சாலையில் ஓடுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Advertisment

ஊரடங்கு உத்தரவை மீறிகாரில் சுற்றியதால், அவர்கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பூனம் பாண்டே கடந்த ஞாயிறு இரவு தனது ஆண் நண்பருடன் மும்பை மெரைன் டிரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றதாகவும். கரோனா நேரத்தில் எவ்வித காரணமுமின்றி வெளியே வந்த காரணத்தால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ததாகவும். அவருடைய சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை எச்சரித்துவிடுவித்ததாகவும்தகவல் வெளியானது.

இந்நிலையில், தான் கைதாகவில்லை என்று நடிகை பூனம் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், தான் கைதானதாக சொல்லப்பட்ட அன்று இரவு தொடர்ச்சியாக படங்கள் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

poonam pandey
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe