Pooja of the movie starring Hari Nadar in a famous studio

கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார். அவரது ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர். இவர் 'பனங்காட்டுப் படை' எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். தற்போது இவர் சினிமா தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமாகிறார்.

Advertisment

இவரின் தயாரிப்பு நிறுவனமான ‘அண்ணாச்சி சினி மார்க்’ தயாரிப்பில், ஹரி நாடார் நடிக்கும் அந்தப் படத்தின் பூஜை இன்று வடபழனியில் இருக்கும் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது. இப்படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் எழுதி இயக்குகிறார். மேலும் இன்று அப்படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. எப்போதும் நகைகளுடனே வலம் வரும் ஹரி நாடார், படத்திலும் அவ்வாறே தனது நகைகளுடன் இருப்பாரா அல்லது, படத்தின் கேரக்டருக்கு ஏற்றார் போல் சிம்பிளாக இருப்பாரா என அவரது ஆதரவாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Advertisment