
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் திரையுலகமும் முடங்கியுள்ளதால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு எனப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் விஸ்வரூபம் பட நாயகி நடிகை பூஜா குமார் உத்தமவில்லன் படத்தில் தான் நடித்த கெட்டப் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"எனது தமிழ்ப் படமான உத்தம வில்லனுக்காக குறுகிய விக்கிற்கான ஆராய்ச்சியில் இருந்தபோது எடுத்த படம் இது. எந்த விக் மிகவும் யதார்த்தமானதாகத் தோன்றுகிறது, எது வசதியாகப் பொருந்துகிறது என்பதைப் பார்க்க நான் பல விக்குகளை முயற்சிக்க வேண்டியிருந்தது. கலைஞர்களாகிய நாங்கள் ஆராய்ச்சி செய்வதையும் எங்கள் தோற்றத்தை மாற்றுவதையும் மிகவும் விரும்புகிறோம்!" எனக் கூறியுள்ளார்.