Advertisment

தன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை!

கடந்த 2012ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான தமிழ் படம் முகமூடி. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிகையாக நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன்பின் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கிலும், ஹிந்தியிலும் கணிசமாக நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

Advertisment

pooja hegde

தற்போது அவர் அல்லூ அர்ஜூனுடன் இணைந்து நடித்துள்ள அலா வைகுந்தபுரமுலோ படம் செம ஹிட்டாகி வெற்றிகரமாக ஓடுகிறது. பிரபாஸுடன் ஜான் என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கர் ராவ் என்ற ரசிகர் ஒருவர் பூஜாவை காண்பதற்காக மும்பைக்குச் சென்றுள்ளார். பூஜாவை எப்படியாவது சந்தித்துவிடலாம் என்று நினைத்த பாஸ்கர் ராவ்க்கு அவர் போடும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியே கிடைக்கிறது. தனக்கு பிடித்த நடிகையை பார்த்துவிட்டுத்தான் சொந்த ஊர் திரும்புவேன் என்று ஒற்றைக்காலில் நின்றுள்ளார். ஐந்து நாட்களாக மும்பையில் தங்கியிருந்ததால் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சாலையோரத்தில் படுத்து உறங்கியுள்ளார்.

Advertisment

இதையடுத்து இந்த விஷயங்களெல்லாம் பத்திரிகைகளில் செய்திகளாக வெளியானது. இதன்பின் இதை அறிந்த நடிகை பூஜா ஹெக்டே பாஸ்கரை நேரில் சந்தித்து, அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டார். அதனுடன் “நீங்கள் மும்பைக்கு வந்ததற்கும் 5 நாட்கள் காத்திருந்து என்னை சந்தித்தற்கும் நன்றி. உங்களுடைய செயலை நினைத்து நெகிழ்ந்தேன். அதே நேரத்தில் என்னுடைய ரசிகர்கள் இதுபோன்ற செயல்களால் சிரமத்திற்குள்ளாவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

எனது ரசிகர்கள் சாலையில் படுத்து உறங்குவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது அன்பை உணர்வேன் என்று சத்தியமிட்டுக் கூறுகிறேன். ரசிகர்களே என்னுடைய பலம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

pooja hegde
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe