pooja hegde wraped his portion in jana nayagan

வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைகளத்தில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. முழு நேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாகச் சொல்லப்படும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

Advertisment

இப்படம் வருகிற அக்டோபரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகியுள்ளது. 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்யின் பெயர் அவரது கட்சியை குறிக்கும் வகையில் ‘தளபதி வெற்றிக் கொண்டான்’ என வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் கொடைக்கானலில் நடைபெற்றது. அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவர்களுக்கு கையசைத்து ஜீப்பில் நின்றபடியே விஜய் நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisment

pooja hegde wraped his portion in jana nayagan

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் விஜய் சம்பந்தமான காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாம். அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் அவர் மிகவும் எமோஷ்னலாக இருந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து மற்ற நடிகர் நடிகைகளின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பூஜா ஹெக்டே சம்பந்தமான காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். விரைவில் முழு படப்பிடிப்பும் முடியவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். படத்தின் டீசர் விஜய் பிறந்தநாளான வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.