சுதாகொங்கராஇயக்கத்தில் சூர்யாநடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படம் கோடைவிடுமுறையில் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அறிவிப்பும் வெளியானது.

Advertisment

இந்நிலையில் சூர்யாமீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்துபடம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'அருவா' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில்கரோனா தொற்று காரணமாகப் படப்பிடிப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுடன் நாயகியாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

Advertisment

இந்நிலையில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பூஜாஹெக்டேஇப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகிறார் என்று தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்துபூஜாஹெக்டேதனதுட்விட்டர் பக்கத்தில்,நான் தமிழில்நடிக்க எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை.ஆனால், தமிழில்நடிக்க மும்முரம் காட்டி வருகிறேன். நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். விரைவில் தமிழில்நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.