Advertisment

கோலிவுட்டில் மூன்றாவது படம் - சூர்யாவிற்கு ஜோடியான பூஜா ஹெக்டே

pooja hegde to pair with suriya in karthik subbaraj new movie

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்தார். இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்களும் கமிட்டாகினர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு 'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாகக் கூறி படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதற்கிடையில் திடிரென்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் சூர்யாவின் 44ஆவது படமாக இப்படம் உருவாகும் என்றும் சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத்தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்கவுள்ளதாகவும் ஜூன் இடையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அறிவித்தது. பின்பு முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானி தொடங்குவதாகவும் ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்தது. அங்குப் பிரம்மாண்ட செட் போடப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் ஹூரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பூஜா ஹெக்டே இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை முகமூடி, பீஸ்ட் என இரண்டு தமிழ்ப் படங்களிலே நடித்துள்ள இவர், தற்போது சூர்யா படத்தின் மூலம் மூன்றாவது தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். இதனிடையே இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

karthik subbaraj pooja hegde actor suriya Suriya 44
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe