விஜய் படத்தில் 'புட்ட பொம்மா' நடிகை! ரசிகர்கள் உற்சாகம்!

cvsadvzds

நடிகர் விஜய் அடுத்தாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் 'புட்ட பொம்மா' தெலுங்கு பாடல் புகழ் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே தமிழில் ‘முகமூடி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளது. இதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடங்களைத் தேர்வு செய்ய இயக்குனர் நெல்சன் தற்போது ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புவிரைவில் தொடங்கி, வரும் பொங்கலுக்குப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

pooja hegde thalapathy 65
இதையும் படியுங்கள்
Subscribe