/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1160.jpg)
'எதற்கும் துணிந்தவன்' படத்தைதொடர்ந்து நடிகர் சூர்யா, பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார்.கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். பாலா படத்தின் பணிகளை முடித்துவிட்டு சூர்யா வாடிவாசல் படத்தின் பணியில் ஈடுபடவுள்ளார்.
இதனிடையே நடிகர் சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா படமாக உருவாக்கவுள்ள இப்படம்பீரியட் கலந்த ஆக்சன் கதையாகஇருக்கும் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாத இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகிகுறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை முதலில் ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனம் ராஜா தயாரிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது சில காரணங்களுக்காக யூ.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)