என்.ஜி.கே படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஏர் டெக்கான் என்று அழைக்கப்படுகிற கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு முன்னமே நடந்து முடிந்த நிலையில் அபர்னா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்ததாகவும், அவருக்கான ஷூட்டிங் பகுதி நிறைவடைந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் மேலும் ஒரு முக்கிய பெண் கதாபாத்திரம் இப்படத்தில் சேரு இருப்பதாக பேசப்படுகிறது. அது தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் பூஜா ஹெக்டேதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பூஜா ஹெக்டே மகேஷ் பாபுவுடன் நடித்த மஹரிஷி படம் செம ஹிட் அடித்துள்ளது. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்த முகமூடி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இவர்தான்.