/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/208_4.jpg)
நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜியாவில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. தளபதி 65 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு பீஸ்ட் எனப் பெயரிட்டுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பிறந்தநாளன்றும், செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்றும் வெளியிட்டது.
தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுவருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்திற்கான நடனப்பயிற்சியில் நடிகை பூஜா ஹெக்டே கவனம் செலுத்திவருகிறார். நடனப்பயிற்சியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)