‘தளபதி 69’ - அடுத்தடுத்து கமிட்டாகும் பிரபலங்கள்

pooja hegde bobby deol  in vijay 69

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது கடைசி படமாக பார்க்கப்படும் ‘விஜய் 69’ படம் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க அ.வினோத் இயக்குகிறார். இது தொடர்பாக ஒரு வீடியோவை நேற்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அந்த வீடியோவில் விஜய்யின் ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விஜய் படங்களில் வேலை செய்பவர்கள் என அனைவரும் உருக்கமாக பேசியிருந்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் விஜய் சினிமாவை விட்டு விலகுவது வருத்தமளிப்பதாக பலரும் உருக்கமுடன் பதிவிட்டு இருந்தனர்.

இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அ. வினோத் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், “ஜனநாயகத்தின் ஒளி ஏற்றுபவர்” என்ற வாசகத்துடன் கையில் தீப ஒளி ஏற்றும் புகைப்படம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இப்படம் அரசியல் கதைகளத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. விஜய்யின் முழுநேர அரசியல் நுழைவுக்கு முன் கடைசிப் படமாக இப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்து வருகிறது.

pooja hegde bobby deol  in vijay 69

இந்த சூழலில் படத்தை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் பூஜா ஹெக்டே இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கு முன்னதாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். மேலும் பாபி தியோல் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கவுள்ளார். பாலிவுட்டில் அனிமல் படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் தற்போது தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

முன்னதாக இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியான நிலையில், த்ரிஷா, சமந்தா, மிருணாள் தாக்கூர், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளின் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

actor vijay pooja hegde Thalapathy 69
இதையும் படியுங்கள்
Subscribe