/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pooja-hegde-gaddalakonda-ganesh-sm1.jpg)
தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டேவுக்கு இங்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சென்ற அவருக்கு அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'அலா வைகுண்டபுரம் லோ' படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அந்த படத்தில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. இதையடுத்து இவருக்கு மீண்டும் தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தது. இதன் காரணமாக நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடித்து வரும் இவர் தற்போது நிலவி வரும் கரோனா தொற்று குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில்...
"கரோனாவுக்கு முன்னால் எல்லோரும் சமம். அதற்கு பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் தாக்குகிறது. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டி உள்ளது. கரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க வேண்டி உள்ளது. இருந்தும் குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டோடு இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாங்களோ படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருக்கிறது. இதனால் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் எங்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்பு மாதிரி எங்களால் ஊர் சுற்ற முடியவில்லை. படப்பிடிப்பு அரங்கிலும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. இந்த வேதனை எனக்குள் நிறைய இருக்கிறது. முக கவசம் அணியாமல் வாழும் வாழ்க்கை எப்போது வருமோ என்ற ஏக்கம் உள்ளது" என்றார்.
Follow Us