/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20210121-WA0005.jpg)
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என்பதே பல கலைஞர்களின் விருப்பமாக உள்ளது. இதற்காக எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியைத் தழுவிய நிலையில், இம்முறை இயக்குனர் மணிரத்னம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் அஜய் பிரதீப். எடர்நிட்டி மோஷன் கிராஃப்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் எடர்நிட்டி ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம்உருவாக உள்ளது. 125 மணி நேரம் ஓடும் முழுநீளத் திரைப்பட வடிவில் எடுக்கப்படவுள்ள இப்படம், முன்னணி ஓடிடி தளத்தில் வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளது இப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 18-ல் படப்பிடிப்பைத் துவங்கி, அடுத்த ஆண்டு (ஏப்.14 2022) முதல் பிரபல ஓடிடி தளத்தில் 9 சீசனாக வெளியிட,தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)