ponniyin selvan teaser release date out now

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு பணிகளைமுடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இதனிடையே 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் பொன்னியின் செல்வன் டீசர் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நாளை(8.7.2022) மாலை 6 மணிக்கு சென்னை ட்ரேட் சென்டரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஆகியோரின்போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது த்ரிஷா போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷாநடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment