/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/27_24.jpg)
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகத்தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின், இயல்புநிலை திரும்பியதையடுத்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரண்மனை ஒன்றில் கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய காட்சிகள் இந்த அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேச ஷெட்டியூல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை திரும்பவுள்ள படக்குழு, சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு இறுதிகட்டபடப்பிடிப்பிற்காக ஊட்டி செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)