Advertisment

சோழ தேசத்தை நோக்கி பயணம் ; பொன்னியின் செல்வன் படக்குழுவின் புதிய திட்டம்

ponniyin selvan team to travel thanjavur to promote their film

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழு.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படக்குழு தஞ்சாவூர், சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் துபாய் போன்ற ஊர்களில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதைக்களத்திற்கும் சோழதேசமான தஞ்சை உள்ளிட்ட பல ஊர்களுக்கும் தொடர்பு இருப்பதால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

jayam ravi manirathnam actor vikram ponniyin selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe