Advertisment

சோழ வம்சத்தை கருவறுக்க சபதம் எடுத்த பாண்டியர்கள்

ponniyin selvan sneak peek released

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழு.

Advertisment

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கையில், பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் நடக்கும் நிகழ்வுகளை விரிவாக சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக "சோழ அரச வம்சத்தையே கருவறுக்க அவர்கள் சபதம் எடுத்தனர்" என கமல் குரலில் வரும் வசனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

Advertisment

actor kamal hassan jayam ravi manirathnam ponniyin selvan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe