Advertisment

பொன்னியின் செல்வன் ஷூட்டிங் தொடங்கப்பட்டதா? வைரலாகும் புகைப்படங்கள்...

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக எடுக்க இருக்கிறார். இந்த படத்திற்காக கடந்த ஒரு வருடமாக முதற்கட்ட வேலைகள் செய்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 800 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Advertisment

ponniyin selvan

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, லால் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அண்மையில்தான் கீர்த்தி சுரேஷும், பார்த்திபனும் இந்த படத்தில் நடிப்பதிலிருந்து விலகிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தோட்டா தரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

Advertisment

முன்னரே தொடங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்பு, சில பிரச்சினைகள் காரணமாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், முதற்கட்டப் படப்பிடிப்பிற்ககாக ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். பொன்னியின் செல்வன் படபிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் உலா வந்துக்கொண்டிருக்கின்றனர். இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

maniratnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Subscribe