'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு முடிவடையும் தேதி குறித்த அப்டேட்!

Mani Ratnam

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு தடங்களுக்குப் பிறகு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் நிறைவடைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை முடித்த கையோடு பின்தயாரிப்பு பணிகளில் ஈடுபட மணிரத்னம் தயாராகி வருவதாகக் கூறுகின்றனர், நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரத்தினர்.

இதையும் படியுங்கள்
Subscribe