
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில் இதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை இந்த மாதம் ஜெய்ப்பூரில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப்பரவி வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)