Published on 13/09/2022 | Edited on 13/09/2022

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்நிலையில் இப்படத்தின் 'ராட்சச மாமனே' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கார்த்தி (வந்தியத்தேவன்) மாறுவேடத்தில் தன்னை பற்றி விவரித்து பாடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் விநாயக்ரம் குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.