மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் நாளை (30.09.2022) பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழு சென்னை, பெங்களூரு டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர ப்ரோமோஷனில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் தஞ்சையில் ரசிகர்களுடன் நாளை படம் பார்க்கவுள்ளார். இதனிடையே இன்று மதியம் 3 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடவுள்ளார். இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து, "பொ.செ-க்கு எனக்கே இன்னும் டிக்கெட்(திக்கெட்டும் இஃதே) கிடைக்கல" என குறிப்பிட்டுள்ளார்.
திரையரங்குகளில், டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு ஆரம்பித்த சில மணிநேரங்களிலே அனைத்தும் விற்றுவிட்டதாகவும், அதனால் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவு இருக்கும் எனவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.