Advertisment

ஸ்ரேயா கோஷல் குரலுக்காக ஏங்கிய ரசிகர்; இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய ஏ.ஆர்

ponniyin selvan next song release sep1st week

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

அண்மையில் வெளியான 'பொன்னி நதி' மற்றும் 'சோழா சோழா' ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பாடகி ஸ்ரேயா கோஷல் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் ரசிகர் ஒருவர் ஏ.ஆர் ரஹ்மானை டேக் செய்து, ‘ஸ்ரேயா பாடிய பாடல் எப்போது வெளியாகும்’ என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, ‘அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும், காத்திருங்கள்’ என்று ஏ.ஆர் ரஹ்மான் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரேயா கோஷல் ரசிகர்கள் ஏ.ஆர் ரஹ்மான் பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment

ar rahman ponniyin selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe